மன்னாரில் சுமார் 20 மில்லியன் கிலோ கேரள கஞ்சா மீட்பு

07.07.2025 08:10:05

மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது நடுக்குடா கடற்கரைக்கு அருகிலுள்ள காற்றாலை கோபுரம் அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 20 மில்லியன் கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது இன்று அதிகாலை கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி மன்னாரில் நேற்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசேட சோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுக்குடா 30வது காற்றாலை கோபுரம் அருகில் வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 20 மில்லியன் கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கேரள கஞ்சா பொதிகள் இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக கொண்டு வரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.