ஈரான் வளைகுடாவில் அமெரிக்காவின் சமீபத்தைய நடவடிக்கைகள் பதற்றத்தை அதிகரிக்கலாம்
ஈரான் வளைகுடாவில் அமெரிக்காவின் சமீபத்தைய நடவடிக்கைகள் பதற்றத்தை அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது
ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபைக்;கு எழுதியுள்ள கடிதத்தில் ஈரான் இதனை தெரிவித்துள்ளது.
வளைகுடாவிலும் ஓமான்;வளைகுடாவிலும் அமெரி;க்காவின் இராணுவசாகசங்கள் குறித்து ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா தனக்;கு எதிராக போலியான தகவல்களை வெளியிடுகின்றது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றது அச்சுறுத்தும் கருத்துக்களை வெளியிடுகின்றது என ஈரான் பாதுகாப்பு சபைக்கான தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.
இதனை கட்டுப்படுத்தாவிட்டால் யுத்தவெறிபிடித்த இந்த நடவடிக்கைகள் காரணமாக பிராந்தியத்தில் பதற்றம் ஏற்படலாம் என குறிப்பிட்டுள்ள ஈரான் அதன் விளைவுகளிற்கான முழுப்பொறுப்பையும் அமெரிக்கா ஏற்கவேண்டும் என தெரிவித்துள்ளது.
இதேவேளை ஈரான் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான போலியான காரணங்களை உருவாக்குகின்றது ஈரானின் வெளிவிவகார அமைச்சர் ஜவாட் ஜரீவ் தெரிவித்துள்ளார்.
ஈரான் போரினை விரும்பவில்லை எனினும் அது தன்னை பாதுகாக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி டிரம்பும் அவரது கூட்டாளிகளும் பிராந்தியத்திற்கு பி52 விமானத்தை அனுப்புவதற்கும் ஆயுதங்களை அனுப்புவதற்கும் பில்லியன்கணக்கில் செலவிடுகின்றனர் வீணடிக்கின்றனர் என டுவிட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ள ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஈராக்கிலிருந்து கிடைக்கும் புலனாய்வு தகவல்கள் அமெரிக்கா போருக்கான போலியான காரணங்களை உருவாக்குகின்றது என்பதை தெரிவிக்கின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.