
நாளை தேர்தல் நடந்தால் இவர்தான் பிரித்தானியாவின் பிரதமர்.
27.09.2025 09:09:56
பிரித்தானியாவில் நாளை தேர்தல் நடைபெறுமானால், Reform UK கட்சிக்குதான் அதிக இருக்கைகள் கிடைக்கும் என்கிறது சமீபத்திய ஆய்வொன்று. YouGov ஆய்வமைப்பு நடத்திய ஆய்வில், பிரித்தானியாவில் நாளை தேர்தல் நடைபெறுமானால், Reform UK கட்சிக்கு 311 இருக்கைகள் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. தனிப்பெரும்பான்மை பெற 326 இருக்கைகள் தேவை என்பதால், மற்றொரு கட்சி அதற்கு ஆதரவு அளிக்கும்பட்சத்தில் அக்கட்சியின் தலைவரான Nigel Farage பிரித்தானியாவின் பிரதமராகவும் வாய்ப்புள்ளது. |
அதைத்தொடர்ந்து தற்போது ஆளும் லேபர் கட்சிக்கு 144 இருக்கைகளும், லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சிக்கு 78 இருக்கைகளும் கிடைக்கலாம். விடயம் என்னெவென்றால், முன்னர் ஆண்ட போரிஸ் ஜான்சன், ரிஷி சுனக் சார்ந்த கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 45 இருக்கைகள்தான் கிடைக்கும் என்கிறது அந்த ஆய்வு. |