தக்காளி லாரிக்கு நிலம் ஒதுக்காத அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கண்டனம்

30.11.2021 08:10:03

நீதிமன்றம் உத்தரவிட்டும் கோயம்பேடு சந்தையில் தக்காளி லாரிக்கு நிலம் ஒதுக்காத அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கோயம்பேட்டில் மூடிக்கிடக்கும் தக்காளி கிரவுண்டை திறக்க தந்தை பெரியார் மொத்த தக்காளி வியாபாரிகள் சங்கம் தொடர்ந்த வழக்கில், கோயம்பேடு மார்க்கெட் கமிட்டி, சென்னை பெருநகர வளர்ச்சி குழும வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராக சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.