
ஜனாதிபதி ஆணைக்குழு விசாரிப்பது சிக்கலை ஏற்படுத்தும்!
கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கின் பிரதான குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ஷவுக்கு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இவ்விவகாரத்தை ஜனாதிபதி ஆணைக்குழு நியமித்து விசாரணை செய்வது சிக்கல் நிலையை ஏற்படுத்தும். இந்த விடயம் குறித்து ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கை என்னவென்பதை எதிர்பார்த்துள்ளோம் என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். |
மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ஷ சர்வதேச விசாரணைக்கு தயார் என்று அவரது மனைவி ஜனாதிபதி கடிதம் அனுப்பி வைத்துள்ளார். இலங்கையின் உள்ளக விவகாரத்தை சர்வதேசத்துக்கு கொண்டு செல்லும் ஒரு உத்தியாகவே இவ்விடயம் பயன்படுத்தப்படுகிறது. சர்வதேச கட்டமைப்புக்கு செல்வதற்கு முன்னர் தேசிய நீதிக்கட்டமைப்பை நாடலாம் என்றும் குறிப்பிட்டார். கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கின் பிரதான குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவியான எஸ்.சி விஜேவிக்கிரம ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதம் குறித்து கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கின் பிரதான குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவியான எஸ்.சி விஜேவிக்கிரம ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதம் தொடர்பான விரிவான செய்தியை வீரகேசரி பத்திரிகை நேற்று தனது முதற்பக்கத்தில் பிரசுரித்துள்ளது. இந்த கடிதத்தில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.கிருஷாந்தி படுகொலை வழக்கில் சோமரத்ன ராஜபக்ஷ உயர்நீதிமன்றத்தால் குற்றவாளியாக்கப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினர் குற்றம் புரிந்திருப்பார்களாயின் அவர்களுக்கு உள்ளக நீதிகட்டமைப்பின் கீழ் தண்டனை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். முறையான விசாரணைகளின் பிரகாரமே இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கின் பிரதான குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ஷவுக்கு உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.இவ்விவகாரத்தை ஜனாதிபதி ஆணைக்குழு நியமித்து விசாரணை செய்வது சிக்கல் நிலையை ஏற்படுத்தும். இந்த விவகாரத்தை சர்வதேச விசாரணைக்கு கொண்டு சென்று சாட்சியமளிக்க சோமரத்ன ராஜபக்ஷ தயாராகவுள்ளதாக அவரது மனைவி குறிப்பிட்டுள்ளதாக குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச விசாரணைக்கு செல்வதற்கு முன்னர் உள்ளக நீதி கட்டமைப்பின் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது. சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி அனுப்பி வைத்த கடிதம் தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகள் என்னவென்பதை எதிர்பார்த்துள்ளோம் என்றார். |