விஜய்க்கு அப்பாவாக நடிக்கும் சரத்குமார்

15.04.2022 14:04:27

விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. இந்த படத்திற்கு பிறகு விஜய் தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்கிறார். தில் ராஜு தயாரிக்கிறார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார் .

இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் துவங்கியது. இந்நிலையில் விஜய் உடன் நடிகர் சரத்குமார் இப்படத்தில் இணைந்து நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. சரத்குமார் இந்த படத்தில் விஜய்யின் தந்தை கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . மேலும் சரத்குமாருக்கு இப்படத்தில் மூன்று மகன்கள் உள்ளதாகவும், விஜய் மூத்த பையனாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.