ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது?
ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 14 ஆம் திகதிக்குள் அறிவிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் தெரிவித்தார்.
நேற்று (06) நடைபெற்ற ரிஷாத் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்மட்டக் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது கட்சியின் உயர்மட்டக் கூட்ட கூட்டத்தில் நீண்ட நேரமாக எமது உயர்மட்ட உறுப்பினர்கள் இந்த ஜனாதிபதி தேர்தலில் எந்த ஜனாதிபதியை ஆதரிப்பது தொடர்பாக நீண்ட நேர கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இது ஒரு புதிய தேர்தல் என்பதால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி எங்களுக்கு அழைப்பு விடுத்தார். அதேபோல் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்தார்.
எங்கள் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து ஒரு முடிவை எடுத்துள்ளோம் எதிர்வரும் 14 ஆம் திகதிக்குள் அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த பிறகு எந்த வேட்பாளரை ஆதரிப்பது அந்த வேட்பாளரின் வெற்றிக்காக நாடு முழுவதும் எமது கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் உயர்மட்ட உறுப்பினர்கள் இணைந்து வெற்றிக்காக உழைப்போம் என முடிவெடுத்துள்ளோம் என தெரிவித்தார்.