எகிப்து தூதுவருடன் ஜனாதிபதி சந்திப்பு

28.02.2025 08:19:42

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் எகிப்து தூதுவர் ஆதில் இப்ராஹிம் அஹமட் இப்ராஹிம் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (27)  நடைபெற்றது.
 
இந்த சந்திப்பானது ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
 
இலங்கை மற்றும் எகிப்துக்கு இடையில் நீண்ட காலமாகக் காணப்படும் நட்புறவைப் பலப்படுத்துவது தொடர்பிலும் இருநாட்டுச் சுற்றுலா மற்றும் முதலீட்டுத் துறைகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
 
அத்துடன், மத்திய கிழக்கு வலயத்தின் தற்போதைய நிலைமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.