எரிவாயு கசிவு: 4 பேர் பலி

22.10.2021 15:40:53

சீனாவில் உணவகம் ஒன்றில் எரிவாயு கசிவால் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்.நம் அண்டை நாடான சீனாவின் லியானிங் மாகாண தலைநகர் ஷென்யாங்கில் மூன்று அடுக்கு மாடிக் கட்டடத்தில் உணவகம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று திடீரென பயங்கர வெடி சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது.இதில் அந்த கட்டடம் பலத்த சேதமடைந்தது. தகவல் அறிந்து வந்த நுாற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். 47 பேர் படுகாயம் அடைந்தனர்.விபத்து நடந்த பகுதியில் குழாய் வழியாக எரிவாயு சப்ளை செய்யும் பணிகள் நடந்து வந்தன. அதனால், எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்டு விபத்து நடந்திருக்கலாம் என, உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.