உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி அதிரடி..!
உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி சூர்ய காந்த், உச்ச நீதிமன்ற நடைமுறையில் ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். இதுவே அவர் பிறப்பித்த முதல் அதிரடி உத்தரவு ஆகும்.
இனிமேல், வழக்கறிஞர்கள் வழக்குகளை 'வாய்மொழியாகக் குறிப்பிட்டு' அதே நாளில் அவசர வழக்குகளாக விசாரணை பட்டியலில் இணைத்து, உடனடியாக விசாரிக்கும் நடைமுறை ஏற்றுக்கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவரும் நோக்கில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
எனினும், தனிநபர் சுதந்திரம் மற்றும் மரண தண்டனை நிறைவேற்றுவது தொடர்பான வழக்குகள் மட்டும் இதற்கு விதிவிலக்கு அளிக்கப்படும். இந்த வழக்குகளுக்கு, அவசரம் குறித்து எழுத்துப்பூர்வ கடிதம் கொடுத்தால் மட்டுமே, அவை அவசரமாக விசாரிக்கப்படும்.
உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி சூர்ய காந்த் அவர்களின் இந்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.