இளமை பொலிவுடன் காட்சி தரும் 80 வயது நெருங்கும் நடிகை
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகரை சேர்ந்தவர் நடிகை ஜாக்குலின் எல்லன் ஸ்மித். 1945-ம் ஆண்டு அக்டோபரில் பிறந்த இவருக்கு வயது 77-ஐ நெருங்குகிறது. இவருக்கும், இவரது 3-வது கணவர் அந்தோணி பி ரிச்மண்ட்டுக்கும் (வயது 79) பிறந்த மகன் கேஸ்டன் ரிச்மண்ட் (வயது 39). கேஸ்டனை விட ஜாக்குலின் ஸ்மித் இளமையாக காணப்படுகிறார். எனினும், எனது மகன் ஜொலிக்கிறான் என சமூக ஊடகத்தில் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, அதற்கு தலைப்பிட்டு உள்ளார். இவரது மகன் புகைப்படத்தில் கருப்பும், வெண்மையும் கலந்து, நரைத்த தலைமுடியுடன் காணப்படுகிறார். ஆனால், நடிகை ஜாக்குலின் இன்னும் இளமையாக காட்சி தருகிறார். அவரிடம், தோல் மற்றும் முகங்களில் வயது முதிர்வுக்கான அடையாளம் எதுவும் காணப்படவில்லை. இவர்கள் இருவரும் ஒன்றாக உள்ள புகைப்படங்களை பார்த்த சமூக ஊடக பயனாளர்களில், இரண்டு பேரும் சகோதரர் மற்றும் சகோதரி போல் காணப்படுகிறீர்கள் என ஒருவர் தெரிவித்து உள்ளார். இதேபோன்று மற்றொருவர், உங்களது மகன் நன்றாக இருக்கிறார். நீங்கள் ரொம்ப இளமையாக இருக்கிறீர்கள் என தெரிவித்து உள்ளார். வேறு சிலர், இரண்டு பேரும் சேர்ந்து காணப்படும்போது எப்படி அழகாக இருக்கிறார்கள்? என் தெரிவித்து உள்ளனர்.