பிரபல அரசியல் தலைவர் மற்றும் மகனுக்கு 7 ஆண்டுகள் சிறை.

17.11.2025 14:18:38

உத்தர பிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள சிறப்பு எம்.பி.-எம்.எல்.ஏ. நீதிமன்றம், சமாஜ்வாடி கட்சி தலைவர் அசாம் கான் மற்றும் அவரது மகன் அப்துல்லா அசாம் ஆகிய இருவருக்கும் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

வெவ்வேறு பிறந்த தேதிகளுடன் இரட்டை பான் கார்டுகளை சட்டவிரோதமாக பெற்றதாக இவர்கள் மீது பாஜக தலைவர் ஆகாஷ் சக்சேனா 2019-இல் புகார் அளித்திருந்தார்.

விசாரணைக்கு பிறகு, இருவரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு, தலா ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

100க்கும் மேற்பட்ட வழக்குகளை சந்தித்து வரும் அசாம் கான், 23 மாத சிறைக்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சமீபத்தில், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுக்கு எதிராக அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

தற்போது, மாநில அரசியலில் தீவிரமாக செயல்பட தொடங்கியுள்ள அசாம் கானுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு, அவரது அரசியல் எதிர்காலத்தைப் பெரிதும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.