மோடி கேரக்டரில் நடிக்கும் சத்யராஜ்..

20.05.2024 07:15:00

பகுத்தறிவு கொள்கையில் தீவிரமாக இருக்கும் நடிகர் சத்யராஜ் இந்துத்துவா கொள்கையில் தீவிரமாக இருக்கும் பிரதமர் மோடியின் கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கடந்த சில ஆண்டுகளாக அரசியல் பிரபலங்களில் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்பட பலருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் உருவாக்கப்பட்டன. 

இந்த நிலையில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை பிரபல பாலிவுட் நிறுவனம் தயாரிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் மோடி கேரக்டரில் நடிக்க சத்யராஜ் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 

 

பாஜகவுக்கு எதிரான பகுத்தறிவு கொள்கையில் தீவிரமாக இருக்கும் சத்யராஜ் இந்துத்துவா கொள்கையில் தீவிரமாக இருக்கும் மோடி கேரக்டருக்கு நடிப்பதற்கு பணம் தான் காரணம் என்று இந்த படத்திற்காக அவருக்கு ஒரு மிகப்பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.