விடாது துரத்தும் சீனா! திணறும் சிறிலங்கா

27.12.2021 17:52:19

 

இலங்கையின் நிறுவனங்கள் வேண்டும் என்றே மேற்கொண்ட செயல் காரணமாக தமது நிறுவனத்தின் நற்பெயருக்கு ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக சீனாவின் ஷீவின் பயோடெக் (Seawin biotech) நிறுவனத்தின் பிரதி முகாமையாளர் ஹெனா சோங்க் (Hena Chong) தெரிவித்துள்ளார்.

சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படவிருந்த சேதனப் பசளையில் பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் அடங்கி இருப்பதாக கூறி, இலங்கை அந்த பசளை தொகையை ஏற்க மறுத்ததையடுத்தே இந்த அறிவிப்பை சீனா வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

சிறிலங்கா அமைச்சரவையில் தமது நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் டொலர்களை இணங்கினாலும் நிறுவனத்திற்கு ஏற்பட்ட அவப்பெயர் மற்றும் நஷ்டத்திற்காக சிறிலங்காவிடம் கட்டாயம் இழப்பீடு பெற்றே தீர்வோம் என சீனாவின் சேதனப் பசளை நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் மத்தியஸ்த நீதிமன்றத்தின் ஊடாக சிறிலங்காவிடம் கட்டாயம் இழப்பீடு பெறப்படும் எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. சீன நிறுவனத்தின் பிரதி பொது முகாமையாளர் நேற்று இதனை கூறியுள்ளார்.

இலங்கைக்கு சேதனப் பசளையை வழங்கும் கேள்வி மனுக்கு அமைய தாம் 100 வீதம் நேர்மையான விலையை வழங்கியதாகவும் சீன நிறுவனம் குறிப்பிட்டுள்ளார்.