சற்று முன்னர் புதிய அமைச்சர்கள் பதவி பிரமாணம் !

23.05.2022 09:15:15

சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் மேலும் 10 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 11:06 மணிக்கு இவர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

ஏற்கனவே 13 அமைச்சரவை அமைச்சர்கள்  பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். இந்நிலையில் இன்றும் புதிதாக 10 அமைச்சர்கள் அரச தலைவர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

அதற்கமைய புதிய அமைச்சர்களாக, 

கெஹலிய ரம்புக்வெல்ல- நீர் வழங்கல் அமைச்சு

ரொஷான் ரணசிங்க – நீர்ப்பாசன அமைச்சு

விதுர விக்ரமநாயக்க – கலாசார அமைச்சு

டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில் அமைச்சு

பந்துல குணவர்தன – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சு

ரமேஷ் பத்திரன – தொழிற்சாலை அமைச்சு

நசீர் அஹமட் – சுற்றாடல் அமைச்சு

மஹிந்த அமரவீர - விவசாயம், வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சு