விஜய் போட்டியிடப்போகும் தொகுதி இதுதான்.

23.12.2025 13:23:04

விஜய் போட்டியிடப்போகும் தொகுதி குறித்து மூத்த பத்திரிகையாளர் சத்யாலயா ராமகிருஷ்ணன் பேசியுள்ளார். 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பூத் கமிட்டி கூட்டம், கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் பிரச்சாரம், விருப்பமனு தாக்கல் என தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இந்த தேர்தலில் முதல் முறையாக போட்டியிட உள்ள விஜய்யின் தமிழக வெற்றி கழகம் குறித்து மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் விஜய், தவெகவிற்கு திமுகவிற்கும்தான் போட்டி, களத்தில் இல்லாத கட்சிகள் குறித்து பேசப்போவதில்லை என கூறி வருகிறார்.

இந்நிலையில், "விஜய்யின் வருகையால் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுவார், எத்தனை தொகுதிகளில் வெல்வார், வேட்பாளர் தேர்வில் நாம் தமிழர் பாணியை பின்பற்றுவாரா என மூத்த பத்திரிகையாளர் சத்யாலயா ராமகிருஷ்ணன் பேசியுள்ளார்.