கோட்டாபய ஒப்புதல் !

22.05.2022 16:12:01

வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் பதவியை தக்கவைத்துக் கொள்ள அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே மேற்கொண்ட இறுதிநேர முயற்சியும் தோல்வியடைந்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில்,  வெளியுறவு அமைச்சின் புதிய செயலாளராக அருணி விஜேவர்த்தன நியமிக்கப்படவுள்ளதாகவும், வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதற்கான முன்மொழிவை செய்த நிலையில், அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அதற்கு ஒப்புதலை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புதிய செயலாளராக நியமிக்கப்படவுள்ள அருணி விஜேவர்த்தன வெளிநாட்டு சேவையில் பணியாற்றிய மூத்த அதிகாரி என்பதும் அந்த சேவையில் இருந்து முன்கூட்டியே ஓய்வுப் பெற்றுள்ளார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

முன்னதாக வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் பதவியை தக்கவைத்துக் கொள்ள அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே மேற்கொண்ட இறுதிநேர முயற்சியும் தோல்வியடைந்தது.

இதனையடுத்து அவர், கடந்த செவ்வாய்க்கிழமையன்று தமது அலுவலகத்தில் இருந்து தனிப்பட்ட உடமைகளை வீட்டுக்கு எடுத்துச்சென்றுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.