மேற்குக் கரையில் பலஸ்தீன இளைஞனை சுட்டுக்கொன்றது இஸ்ரேலிய படை!

27.01.2021 15:09:02

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஏரியல் என்ற யூத குடியேற்றத்திற்கு அருகே இஸ்ரேலிய படைகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பாலஸ்தீனிய இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

குறித்த பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த இஸ்ரேலிய படை வீரை ஒருவரை குறித்த 17 வயதான இளைஞன் கத்தியால் குத்திக் கொல்ல முயற்சி செய்ததாக இஸ்ரேலிய இராணுவம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த தாக்குதலில் இஸ்ரேலிய படைகளுக்கு எந்தவிதமான சேதங்களும் ஏற்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.