சபாநாயகர் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்

22.02.2024 07:00:00

கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவர் பதவிகளை எதிர்க்கட்சிக்கு வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய (22) பாராளுமன்ற அமர்வின் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.

இந்த பதவிகளை எதிர்க்கட்சிகளுக்கு வழங்குவதாக அரகலய போராட்டத்தின் போதே சபாநாயகர், எழுத்து மூலம் உறுதியளித்ததாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக பிரதி சபாநாயகர் இதன்போது தெரிவித்தார்.