கருணாநிதி நின்னுருந்தாலும் தோக்கடிச்சிருப்பேன்!.
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். 2021 தேர்தலில் அந்த தொகுதியில் போட்டியிட்டுதான் அவர் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்று முதலமைச்சராக மாறினார். தனது சொந்த தொகுதி என்பதால் அங்கு வசிக்கும் மக்களுக்கு அவர் பல வசதிகளையும், திட்டங்களையும் நிறைவேற்றியதாக சொல்லப்படுகிறது.
ஆனால் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் முக ஸ்டாலின் தோல்வியடைந்தார். இது திமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. ஒரு கட்சியின் தலைவரே தோல்வியடைந்தது திமுகவுக்கு பெரிய அவமானமாக அமைந்தது..
தேர்தலின் போது காங்கிரஸுடனான தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்துவிட்டு வெளியே வந்த போது முக ஸ்டாலின் எல்லாம் முடிந்து விட்டது என செய்தியாளர்களிடம் ஒரு செய்கையை காட்டினார். அது தொடர்பான வீடியோ வைரலானது. அதேபோல், ஸ்டாலின் தோல்வியடைந்தவுடன் வி.எஸ் பாபு தனது இரண்டு கைகளாலும் அந்த மேனரிசத்தை செய்து காட்டினார். அவர் தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில்தான் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வி.எஸ். பாபு ‘சொல்வதை செய்யும் ஒரே தலைவர் முதல்வர் ஜோசப் விஜய்தான். எனக்காக பிரச்சாரம் செய்ய 5 நிமிடம்தான் வந்தார்.. கொளத்தூரில் ஜொலித்தது.. அப்போதே என் வெற்றி உறுதியாக விட்டது.. ஸ்டாலின் என்ன.. அவரின் அப்பா நின்னிருந்தாலும் கூட நான் தோற்கடித்திருப்பேன்.. தமிழ்நாட்டில் இனிமேல் தவெக மட்டும்தான்.. திமுகவும் கிடையாது.. அதிமுகவும் கிடையாது’ என அவர் பேசியிருக்கிறார்..