அமெரிக்காவில் வரலாற்று நெருக்கடி! திணறும் ஜோ பைடன்
28.12.2020 11:32:37
அமெரிக்கா ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சவால்களை சமாளிக்க தனது குழு கடுமையாக உழைத்து வருவதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
குறித்த பதிவில் - கொரோனா தொற்று ,பொருளாதாரம், காலநிலை மாற்றம் மற்றும் இன நீதி போன்ற நான்கு வரலாற்று நெருக்கடிகளை எதிர்கொள்கிறது.
ஜனவரி மாதத்தில் வீணடிக்க நேரமில்லை. அதனால் தான் நானும் எனது அணியும் தயாராகி வருகிறோம் என கூறியுள்ளார்.