முக்கிய கேளிக்கை கொண்டாட்டங்கள் நடைபெறாது - அதிகாரிகள் எச்சரிக்கை!
31.12.2020 10:19:39
ஒன்று கூடுவது கொவிட்-19 தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் என்பதால், புத்தாண்டு கொண்டாட்டங்களை மக்கள் தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
மில்லியன் கணக்கானவர்கள் கடுமையான கட்டுப்பாடுகள் அடுக்குக்குள் நுழைந்ததால் அனைவரும் வீட்டுக்குள்ளே இருக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.
இதனால் முக்கிய கேளிக்கை கொண்டாட்டங்கள் நடைபெறாது. மக்கள் விதிகளை கடைப்பிடிக்கிறார்கள் என தேசிய சுகாதார சேவையின் இங்கிலாந்தின் பேராசிரியர் ஸ்டீபன் போவிஸ் கூறினார்.
நள்ளிரவில் நான்காம் கட்ட கட்டுப்பாட்டுக்குள் சுமார் 20 மில்லியன் மக்கள் நுழைவதால் இங்கிலாந்தில் மக்கள் வீட்டில் இருக்குமாறு கூறப்பட்டுள்ளது.
அவர்கள் ஏற்கனவே இங்கிலாந்தின் உயர்மட்ட அடுக்கில் வசித்து வந்த 24 மில்லியனுடன் இணைகிறார்கள். இது உட்புறத்தில் வீட்டுகள் மக்கள் ஒன்று கூடுவதை தடை செய்கிறது.