
சர்ச்சையை கிளப்பியுள்ள தங்க சிலை!
கையில் பிட்காயினுடன் நிற்கும் ட்ரம்பின் தங்க சிலை சர்ச்சையை கிளப்பியுள்ளது. அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள காங்கிரஸ் மாளிகையின் முன், ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் கையில் Bitcoin-ஐ வைத்திருக்கும்படி நிற்கும் 12 அடி உயரமுள்ள தங்க நிற சிலையொன்று நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை பொதுமக்கள் மத்தயில் பெரும் கவனத்தை ஈரத்துடன், அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் விவாதத்தையும் கிளப்பியுள்ளது. |
இந்த சிலையின் அறிமுகம், அமெரிக்காவின் FederalReserve நிறுவனம் தனது முக்கிய வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்ததற்கான அறிவிப்புடன் இணைந்து நடைபெற்றது. இந்த விகித குறைப்பு வேலைவாய்ப்பு சந்தையின் சீர்க்கீடுகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் மந்தநிலை ஆகியவற்றை கருத்தில்கொண்டு மேற்கொள்ளப்பட்டது. "இந்த சிலை நிறுவல், அரசாங்கம் வெளியிடும் பணத்தின் எதிர்காலம் மற்றும் நவீன அரசியில், நிதி புதுமைகள் ஆகியவற்றின் சந்திப்பு புள்ளியை பிரதிபலிப்பதாக" இச்சிலையை நிறுவிய குழுவின் பிரதிநிதி Hichem Zaghdoudi தெரிவித்துள்ளார். மேலும், Cryptocurrency-யின் வளர்ச்சியைப் பற்றி மக்கள் சிந்திக்க இந்த சிலை தூண்டுகோலாக அமைய வேண்டும் என அவர் கூறியுள்ளார். இந்த சிலை, பிட்காயின் மற்றும் ட்ரம்ப் ஆகிய இரண்டும் அமெரிக்க நிதி கொள்கையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை பற்றிய விவாதங்களை தூண்டுகிறது. சிலர் இதை ட்ரம்ப் ஆதரவு வியாபார நடவடிக்கையாகவும், சிலர் நிதி சுதந்திரத்தின் அடையாளமாகவும் பார்க்கின்றனர். |