நெதர்லாந்து பிரதமர் திடீர் இராஜினாமா..!
நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். .
நெதர்லாந்தில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் நெதர்லாந்து நாடாளுமன்றத்தில் புலம்பெயர்ந்தோர் தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதா தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுக்குள் ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி நிலவி வந்தது.
இதனால் மார்க் ரூட் பிரதமராகத் தொடர்வதிலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதிலும் தொடர்ந்து குழப்பம் நிலவிவந்துள்ளது.
கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடுகள்
குறித்த மசோதா தொடர்பான விவகாரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.
அதனைத் தொடர்ந்து நெதர்லாந்து பிரதமராக மார்க் ரூட் தனது பதவியைத் தொடருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணிக் கட்சிகளிடம் இருந்து அழுத்தங்கள் அதிகரித்துக் கொண்டே இருந்துள்ளன.
இதனால் மார்க் ரூட் இன்று தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
150 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட நெதர்லாந்து நாடாளுமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.