மாஸ் காட்டும் சமந்தா

07.02.2024 14:58:10

நடிகை சமந்தா மாஸ் நடிகர் நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை சமந்தா அண்மையில் மயோசிட்டி சென்ற நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர் ஏற்கெனவே நடித்து முடித்து இருந்த ’சாகுந்தலம்’ ’குஷி’ உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

இதனையடுத்து, சிகிச்சை முடியும் வரை வேறு படங்களில் ஒப்பந்தம் ஆகாமல் இருந்த சமந்தா, உடல் நலனில் முழு அக்கறை செலுத்தி வந்தார்.

இந்த நிலையில் தற்போது அவர் கிட்டத்தட்ட நோயில் இருந்து மீண்டு விட்டதாகவும் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாகவும் கூறப்படுகிறது.

 

ஏற்கெனவே ராஜ்&டிகே இயக்கத்தில் உருவாகும் ’சிட்டாடல்’ என்ற வெப் தொடரில் நடித்து வரும் சமந்தா, தற்போது ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகவிருக்கும் அடுத்த படத்தில் நாயகி ஆக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தெரிகிறது.

புஜ்ஜி பாபு இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகயிருக்கும் இந்த படத்தில் சமந்தாவும் இணைந்துள்ளதை அடுத்து இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராம்சரண் தேஜாவின் 16 வது படமாக உருவாக இருக்கும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.