ஹரியின் ‘ரத்னம்’ டிரைலர்..!
பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால், ப்ரியா பவானி சங்கர், கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்த ‘ரத்னம்’ திரைப்படம் வரும் 26ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.
இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த ட்ரெய்லரில் எதிர்பார்த்தது போலவே முழுக்க முழுக்க அதிரடி ஆக்சன் காட்சிகள் உள்ளன என்பதும் விஷாலின் காதலி பிரியா பவானி சங்கருக்கு ஏற்பட்ட பிரச்சனைகளுக்காக தனது உயிரை பயணம் வைத்து விஷால் அவரை காப்பாற்றுவதும், காதலிக்காக விஷாலின் அதிரடி சண்டை காட்சிகள் பார்ப்பதற்கே பிரம்மாண்டமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கௌதம் மேனனின் காவல்துறை அதிகாரி நடிப்பு, சமுத்திரக்கனி ஆவேசமான வில்லன் நடிப்பு ,பிரியா பவானி சங்கர் ரொமான்ஸ், தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை, ஹரியின் அதிரடி திரைக்கதை என பல பாசிட்டிவ் இந்த பட்அத்தில் இருப்பதால் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாமிரபரணி , பூஜை ஆகிய படங்களை அடுத்து மீண்டும் ஹரி - விஷால் கூட்டணி இணைந்துள்ளதை அடுத்து ஹாட்ரிக் வெற்றி படமாக இந்த கூட்டணிக்கு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.