விஜய் சேதுபதியின் காட்டான்.
11.12.2025 13:50:17
|
ஹாட்ஸ்டாரில் ஏற்கனவே பிக் பாஸ், விஜய் டிவி சீரியல்கள் ஆகியவை வெளியாகி வருகிறது. இந்நிலையில் தென்னிந்திய மொழிகளில் மொத்தமாக 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்து புது தொடர்கள் மற்றும் படங்களை தயாரித்து வருவதாக ஹாட்ஸ்டார் அறிவித்து இருக்கிறது. இதில் தமிழில் மட்டும் 4000 கோடி ரூபாய் முதலீடு செய்ய தமிழக அரசுடன் ஹாட்ஸ்டார் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது. |
|
தமிழில் ஏராளமான புது நிகழ்ச்சிகள், படங்கள் மற்றும் தொடர்கள் ஹாட்ஸ்டாரில் வர இருக்கிறது. அதை நேற்று நடந்த Jio Hotstar South Unbound நிகழ்ச்சியில் அறிவித்தனர். அதில் விஜய் சேதுபதி, கமல், உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஷோவை தெலுங்கில் தொகுத்து வழங்கும் நாகார்ஜூனா, மலையாளத்தில் தொகுத்து வழங்கும் மோகன்லால் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். |