சுகாதார பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை

14.01.2022 07:57:57


இன்று  முதல் எதிர்வரும் வாரஇறுதி நாட்கள் தொடர்பில் சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் தொடர்பில் சிந்தித்து பொறுப்புடன் செயற்படுமாறு சுகாதார பிரிவு மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சிறிய அதிகரிப்பு ஏற்பட்டாலும் அது பாரிய விடயமாகும் எனவும் அது அதிகரிப்பின் ஆரம்பமாக அமையுமென்பதே இதற்கு காரணமென விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் டெல்டா திரிபே பிரதான திரிபாக காணப்படுகிறது. தடுப்பூசி பெற்றுக்கொண்டால் மாத்திரமே மரணத்திலிருந்த தப்ப முடியும் என விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாளை முதல் நீண்டவார இறுதி நாட்களில் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியமென விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டார்.

இதேவேளை தவறான எண்ணங்களிலிருந்து விடுபட்டு பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் ச்சன்ன ஜயசுமன கோரிக்கை விடுத்துள்ளார்.

தடுப்பூசி வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்கும் நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தில் காணப்படுகிறது. பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் சற்று குறைவாகவே காணப்படுகிறது. குறித்த தவறான எண்ணங்களை விடுத்து பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் ச்சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.