தவெக எம்.எல்.ஏக்களுக்கு கார், உதவியாளர்?!.
2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தவெக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது. அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராகிவிட்டார். தவெக ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட 100 நாட்கள் ஆகிவிட்டது. எதிர்கட்சியாக இருக்கும் திமுக வழக்கம்போல் ஆளும்கட்சியான தவெகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. ஒருபக்கம், முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சியை நன்றாக நடத்தவேண்டும் என முனைப்பு காட்டி வருகிறார்.
இந்நிலையில், தமிழ்நாட்டு சட்டசபைக்கு முதல்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு கார் மற்றும் உதவியாளர் வழங்க முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
சமீபத்தில் சட்டசபையில் பேசிய விசிக எம்.எல்.ஏ ஜோதிமணி பொருளாதார வசதி இல்லாததால் தொகுதி முழுவதும் சென்று ஆய்வு செய்ய கார் இல்லை எனவும், உதவியாளர்களை வைத்துக்கொள்ள முடியவில்லை எனவும். முதல்வர் விஜய் தனக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்தே முதல்வர் விஜய் இந்த முடிவை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.