பயணிகளுக்கு அதிமான விருப்பத் தேர்வு !

04.03.2021 10:20:31

கனடாவில், 36 கூடுதல் கொவிட்-19 தனிமைப்படுத்தப்பட்ட தங்கும் விடுதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கூட்டாட்சி அங்கீகாரம் பெற்ற தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளை பட்டியலிடும் கனடா அரசாங்க வலைத்தளம் இதனை உறுதிசெய்துள்ளது.

மொத்தத்தில், கனடாவின் நான்கு முன்னணி சர்வதேச விமான நிலையங்களிலிருந்து உள்வரும் பயணிகளை ஏற்றுக்கொள்ள 47 வசதிகள் இப்போது உள்ளன.

சமீபத்திய புதுப்பிப்பு ஒன்றாரியோ மற்றும் கியூபெக்கின் தங்கும்விடுதி எண்களை கணிசமாக அதிகரித்தது. கிடைக்கக்கூடிய வசதிகளின் எண்ணிக்கை முறையே 17 மற்றும் 13 ஆக உயர்ந்தது.