ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார் ஸ்டாலின்

19.07.2021 10:47:28

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) சந்திக்கவுள்ளார்.

இதன்போது மேகதாது அணை விவகாரம், நீட் தேர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும்  மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை சட்டசபையில், திறந்துவைப்பதற்கான நிகழ்வு இடம்பெறவுள்ளது. இது குறித்து பேசப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.