"பட்டத்த பறிக்க நூறு பேரு".. ஜெயிலர் FDFS-ல் பாட்டு பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்திய அனிருத்

10.08.2023 09:54:46

"பட்டத்த பறிக்க நூறு பேரு".. ஜெயிலர் FDFS-ல் பாட்டு பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்திய அனிருத்நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று திரையரங்களில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் திரையரங்குகளில் மேள தாளத்துடன் கொண்டாடி வருகின்றனர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை பார்க்க ரசிகர்கள் திரையரங்குகளில் கூடி, மேளம் தாளம் அடித்து பாலபிஷேகம் செய்து கொண்டாடி வருகின்றனர்.