சூடானில் பழங்குடியினருக்கு இடையிலான மோதல்

17.07.2022 11:06:51

சூடானில் இரண்டு பழங்குடியினருக்கு இடையே தொடர்ந்தும் இடம்பெற்றுவரும் மோதலில், 33 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன

மேலும் குறித்த மோதலில் சுமார் 108 பேர் காயமடைந்துள்ள அதேவேளை பல குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலத் தகராறு காரணமாக பெர்டி மற்றும் ஹவ்சா பழங்குடியினருக்கு இடையே இந்த மோதல் இடம்பெற்றுள்ள நிலையில் பிராந்தியத்தில் அதிக துருப்புக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும் நேற்று சனிக்கிழமை மோதல் அதிகரித்த நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்த மேலதிக துருப்புக்கள் தேவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ஒரு மாதத்திற்கு மக்கள் நடமாட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாது என தெரிவித்து ப்ளூ நைல் ஆளுநர் இரவு நேர ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.