6 வயது குறைவான நடிகருடன் ஜோடி சேரும் திரிஷா
நடிகை திரிஷா தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளில் நடித்து வருகிறார். இவர் தற்போது 'லியோ' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மௌனம் பேசியதே, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஜி, ஆறு, குருவி, விண்ணைதாண்டி வருவாயா உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் திரிஷா. சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் திரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாது பல்வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது
இந்த நிலையில் திரிஷா அடுத்ததாக மலையாள நடிகருடன் ஜோடி சேர்ந்துள்ளார். அதாவது, அகில் பால்-அனஸ்காஸ் ஆகிய இரண்டு இயக்குனர்களும் இணைந்து இயக்கும் திரைப்படம் 'ஐடென்டிட்டி'. இந்த படத்தில் டோவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக திரிஷா இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர். இதற்கு ரசிகர்கள் திரிஷா, டோவினோ தாமஸ்சைவிட 6 வயது பெரியவர் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்