வாகன விபத்தில் பிரபல சிங்கள நடிகை ஹய்சின்த் விஜேரத்ன உயிரிழப்பு!

31.07.2021 04:14:13

நுவரெலியா – தலவாக்கலை வீதியில் லிந்துலை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பிரபல சிங்கள நடிகை ஹய்சின்த் விஜேரத்ன உயிரிழந்துள்ளார்.

அவர் பயணித்த சிற்றுந்து நேற்று(30) இரவு பள்ளம் ஒன்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.