சுகபோகமாக வாழ்வதற்கே அநுர வெளிநாடுகளுக்கு விஜயம் செய்கிறார்!

17.06.2024 09:39:08

”தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, கட்சியின் நிதி இருப்பினை தக்கவைத்துக் கொள்வதற்காகவே வெளிநாடுகளுக்கு விஜயம்  மேற்கொள்வதாக” நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி இதனைத் தெரிவித்தார்.

அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்  கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கட்சியின் நிதி இருப்பினை தக்கவைத்துக்கொள்வதற்காகவே வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்கின்றார்.

அங்கு சென்று இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடுவதில்லை. மாறாக நாட்டின் கல்வித்துறை சுகாதாரத்துறை அல்லது நாட்டின் அபிவிருத்திக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடுவதில்லை.

 

வெளிநாடுகளுக்கு சென்று அங்கு நிதியினை திரட்டி உள்நாட்டில் சுகபோகமாக வாழ்வதற்காகவே அவர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்கிறார்.

இந்த நாட்டை வழிநடத்துவதற்கான சிறந்தலைவர் யார் என்பதில் வெளிநாடு வாழ் இலங்கையர்களும் சிந்தித்து செயல்பட வேண்டும். இவ்வாறான அரசியல் சூழ்ச்சிதாரர்களின் சதித்திட்டங்களுக்கு வெளிநாடு வாழ் இலங்கையர்கள் ஒத்துழைப்பு வழங்ககூடாது” இவ்வாறு சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.