
எனக்கு பிடித்த ஹீரோ விஜய் : விஷால்
06.11.2021 10:39:07
பாலா இயக்கிய அவன் இவன் படத்திற்கு பிறகு ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் - ஆர்யா நடித்துள்ள படம் எனிமி. அவர்களுடன் மிருணாளினி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ் என பலர் நடித்துள்ள இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வந்துள்ளது.
ஆக்சன் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தை பிரமோசன் செய்யும் விதமாக எனிமி படம் ஓடும் சில தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்கள் முன்பு தோன்றி வருகிறார் விஷால். இந்நிலையில் நேற்று சென்னையில் உள்ள ரோகினி தியேட்டரில் எனிமி படம் பார்க்க வந்த ரசிகர்கள் முன்னிலையில் தோன்றினார் விஷால். அப்போது எனக்கு பிடித்த ஹீரோ விஜய் என்று தெரிவித்தவர், நான் விஜய் படங்களைப் பார்த்துதான் இதுதான் சினிமா என்பதை கற்றுக்கொண்டேன் என்று பேசினார். அந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.