சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

20.11.2021 10:34:55

இந்தியாவின் கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பம்பை ஆற்றில் நீர் மட்டம் அதிகரித்தது. இதனால் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இந்நிலையில், பம்பை ஆற்றில் வெள்ளம் குறைந்ததையடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை மாவட்ட நிர்வாகம் நீக்கியுள்ளது.