லுனுகம்வெஹேர பகுதியில் உணரப்பட்ட நில அதிர்வு

08.09.2021 05:37:50

ஹம்பாந்தோட்டை – லுனுகம்வெஹேர நீர்த்தேகத்திற்கு அருகில் நேற்று உணரப்பட்ட நில அதிர்வானது நாட்டின் நிலப்பரப்பிற்குள் ஏற்பட்டதல்லவென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைகழகத்தின் புவியியல் தொடர்பான சிரேஸ்ட பேராசிரியர் அதுல சேனாரட்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த  நில அதிர்வானது சுமத்ரா தீவு பகுதியிலேயே ஏற்பட்டுள்ளது.

அந்த சந்தர்ப்பத்தில் உலக நாடுகளில் ஏற்பட்ட நில அதிர்வுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கைக்குள் எந்தவொரு நில அதிர்வும் ஏற்பட்டிருக்கவில்லை எனவும் பேராதனை பல்கலைகழகத்தின் புவியியல் தொடர்பான சிரேஸ்ட பேராசிரியர் அதுல சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார்.

லுனுகம்வெஹேர பகுதியில் நேற்று முற்பகல் 2.4 மெக்னிடியுட் அளவிலான நில அதிர்வொன்று உணரப்பட்டுள்ளது.

இந்த நில அதிர்வு நேற்று முற்கல் 10.38 அளவில் உணரப்பட்டதாக புவிச்சரிதயவில் மற்றும் சுரங்க பணியகம் உறுதிப்படுத்தியது.

இதனிடையே, கடந்த 24 ஆம் திகதி லுனுகம்வெஹர நீர்த்தேக்கத்திற்கு அருகில் நில அதிர்வொன்று உணரப்பட்டது.

அது தொடர்பில் தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புவிச்சரிதயவில் மற்றும் சுரங்க பணியகம் தலைவர் அநுர வல்பொல தெரிவித்துள்ளார்.