இந்தியாவை சிக்க வைக்கும் முயற்சியில் சீனாவின் காய்நகர்த்தல்

17.07.2021 10:32:05

 

எல்லை நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் இந்திய – சீன இராணுவ மட்ட கலந்துரையாடலுக்கான ஒப்புதல்கள் இருதரப்பிலிருந்தும் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு நிலையில், உண்மையான கட்டுப்பாட்டு எல்லை மாற்றுவது ஏற்புடையதல்ல என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

சீன வெளிவிவகார அமைச்சர் வோங் ஹீயை சுட்டிக்காட்டியே இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே பதற்றங்களுக்கு வழிவகுக்காது எல்லையில் காணப்பட கூடிய அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வை எட்டும் வகையில் மூத்த இராணுவ அதிகாரிகள் மட்ட கலந்துரையாடல் அமைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ அறிக்கையின் பிரகாரம், எல்லையின் ஸ்திரத்தன்மையை தொடர்ந்து உறுதி செய்தல் மற்றும் எந்தவொரு தரப்பினரும் பதட்டத்தை அதிகரிக்கும் ஒருதலைப்பட்ச நடவடிக்கையும் எடுக்கமலிருத்தல் போன்ற தீர்மானங்கள் கடந்த ஜுன் மாதம் 25 ஆம் திகதி இடம்பெற்ற இரு தரப்பு இராணுவத் அதிகாரிகள் மட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலுக்கு பின்னர் மேற்குறிப்பிட்ட விடயங்கள் குறித்து எல்லை பிரச்சினையை மையப்படுத்தி இடம்பெற்ற அனைத்து கூட்டங்களின் போது இந்தியா வலியுறுத்தி இருந்தது.

மேலும் 2020 செப்டம்பர் மாதத்தில் மாஸ்கோவில் இடம்பெற்ற இறுதி சந்திப்பை நினவுக்கூர்ந்துள்ள ஜெய்சங்கர், அப்போது எட்டப்பட்ட உடன்படிக்கையைப் பின்பற்றி, பணிநீக்கம் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

கிழக்கு லடாக்கில் காணப்பட கூடிய உண்மையான கட்டுப்பாடு எல்லையில் மீதமுள்ள பிரச்சினைகளை விரைவாகத் தீர்த்துக் கொள்வது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மறுப்புறம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாங்கோங் ஏரி பகுதியில் காணப்பட்ட பிரச்சினைகளுக்கும் தீர்வினை எட்ட வேண்டியுள்ளதுடன் சீன தரப்பு எங்களுடன் இணைந்து செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும், மீதமுள்ள பகுதிகளின் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் தற்போதுள்ள நிலைமையை நீடிப்பது இரு தரப்பு நலனுக்கு நன்மையளிக்காது.

எதிர்மறையான முறையில் பாதிக்கும் என்பதையும் இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டதை ஜெய்சங்கர் நினைவு கூர்ந்தார். மேலும் எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் சமாதானத்தை பேணுவதற்காக 1988 ஆண்டு முதல் இரு தரப்பு உறவுகளை வளர்ப்பதற்கான அடித்தளமிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

1993 மற்றும் 1996 ஒப்பந்தங்களின் கீழ் உள்ள கடமைகளையும் புறக்கணித்து எல்லையில் இடம்பெற்ற சம்பவங்கள் இரு தரப்பு உறவுகளை பாதித்துள்ளது.

எனவே, உடன்படிக்கைகள் மற்றும் நெறிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்கும் அதே வேளை, கிழக்கு லடாக்கில் பிரச்சினைகளை விரைவாக தீர்க்க இரு தரப்பினரும் செயல்படுவது பரஸ்பர நன்மைகளை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.