தமிழக காங்கிரஸ் எம்எல்ஏ மீது வழக்கு போட்ட கேரள காங்கிரஸ் அரசு.

06.07.2026 14:35:04

தமிழகத்தின் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பிரவீன் குமார் மற்றும் 16 பேர் மீது கேரள மாநில போலீஸார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 கேரள மகா திருச்சபைக்குச் சொந்தமான தேவாலய ஆக்கிரமிப்பு மற்றும் நிர்வாக மோதல் தொடர்பாக, கடந்த 2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தில் தேவாலயத்திற்கு பூட்டு போட்டு வன்முறையில் ஈடுபட்டதாக இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.

சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தில், தற்போது பிரவீன் குமார் எம்எல்ஏ-வாக பதவி வகிக்கும் இந்த சூழ்நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் பின்னணியில் ஏதேனும் அரசியல் உள்நோக்கம் இருக்கலாமா என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.

அதே நேரத்தில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-வாக இருக்கும் ஒருவருக்கு எதிராக, கேரளாவில் ஆட்சியில் இருக்கும் அரசு வழக்குப்பதிவு செய்திருப்பது தேசிய மற்றும் மாநில அரசியல் தளங்களில் பெரும் முரண்பாட்டையும் விவாதங்களையும் உருவாக்கியுள்ளது. இச்சம்பவம் குறித்து எம்எல்ஏ பிரவீன் குமார் தரப்பு விரைவில் சட்டப்பூர்வமாக எதிர்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.