ட்ரம்பின் விஜயத்தால் பிரித்தானியாவில் சிறப்பு ஏற்பாடு!

15.09.2025 07:49:39

ஜனாதிபதி ட்ரம்ப் பிரித்தானியாவிற்கு விஜயம் செய்யவிருக்கும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ட்ரம்பின் ஆதரவாளரான சார்லி கிர்க் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அப்படியான ஒரு தாக்குதல் ட்ரம்ப் மீதும் முன்னெடுக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மன்னருக்கான முடிசூட்டு விழாவிலும் இல்லாத வகையில் பாதுகாப்பு திட்டமிடப்பட்டுள்ளது. வின்ட்சர் கோட்டையில் 55 ட்ரோன்களுடன் பொலிசார் கண்காணிக்க உள்ளனர்.

ட்ரம்ப் தம்பதிக்கு இரண்டு நாட்கள் மன்னர் விருந்தளிக்க உள்ளார். பிரித்தானியாவில் ட்ரம்பைப் பொறுத்தமட்டில் தொலைவில் இருந்து தாக்கப்படும் வாய்ப்புகள் குறைவு என்றே முன்னாள் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதனால், ட்ரோன் ஊடாக தாக்குதல் நடத்தவும் வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவில் துப்பாக்கி கலாச்சாரம் இல்லை என்றாலும், ட்ரோன்கள் தொல்லை தரலாம்.

பொலிசார் அதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்றார். ட்ரம்பின் செயற்பாடுகளால் பொதுமக்கள் அவர் மீது கடும் கோபத்தில் உள்ளனர். அது பொலிசாருக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தும். ஜனாதிபதி ட்ரம்ப் பிரித்தானியாவிற்கு அரசு முறையாக விஜயம் செய்வது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.