இலங்கைக்கு உதவ இந்தியா உறுதிபூண்டுள்ளது

31.07.2022 10:11:00

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உதவ இந்தியா உறுதிபூண்டுள்ளதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இந்திய குடியரசுத் தலைவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

குடியரசுத் தலைவராக பதவியேற்றமைக்கு வாழ்த்து தெரிவித்து ரணில் விக்ரமசிங்க அனுப்பிய கடிதத்திற்கு நன்றி தெரிவித்து அவர் குறித்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.

பொருளாதார சிக்கலால் ஏற்படும் சவால்களை சமாளிக்க இலங்கை மக்களுக்கு உதவ இந்தியா துணை நிற்கும் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறிப்பிட்டுள்ளார்.