வேலையில்லாமல் தவிக்கும் புலம்பெயர்ந்தோர்

15.07.2024 08:14:05

கனடாவில் கடந்த ஐந்தாண்டுகளில் நிரந்தரக் குடியுரிமை பெற்ற புதிய குடியேறிகளின் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, சமீபத்திய புலம்பெயர்ந்தோரின் வேலையில்லாத நிலைமை 12.6% ஆக இருந்தது. இது கடந்த ஆண்டை விட 4% அதிகமாகும் என்று அரசாங்கத்தின் தரவு நிறுவனமொன்று மேற்கோள் காட்டியுள்ளது.

கனடாவில் நிரந்தர வதிவிட அந்தஸ்து பெறும் புலம்பெயர்ந்தோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்தியர்கள், அந்நாட்டில் தற்போது நிலவும் வேலையின்மை நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதாக கூறப்படுகின்றது.

அதாவது, இந்தியாவிலிருந்து குடியேறியவர்களிடையே வேலையின்மை விகிதம் 30 சதவீதத்தை எட்டியுள்ளது.

மேலும், இந்தியர்கள் மட்டுமில்லாது, அங்குள்ள ஏனைய புலம்பெயர்ந்தோரையும் வேலையின்மை கடுமையாக பாதித்துள்ளதாக தெரியவருகின்றது.

2023-இல், கனடாவின் 471,810 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களில், இந்தியர்கள் மட்டும் 139,785 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.