
இறுதிக்கட்டத்தில் பிசாசு 2 படப்பிடிப்பு
12.08.2021 07:34:32
2014ல் தான் இயக்கிய பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது ஆண்ட்ரியாவை கதையின் நாயகியாக வைத்து இயக்கி வருகிறார் மிஷ்கின். விஜய் சேதுபதி, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசைமைக்கிறார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஆகஸ்டு 18-ந்தேதியோடு படப்பிடிப்பை முடிக்க எண்ணி உள்ளார். அதையடுத்து உடனடியாக இறுதிக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு சில மாதங்களில் பிசாசு-2வை தியேட்டரில் வெளியிட எண்ணி உள்ளார்.