தர்ஷனின் “சரண்டர்” வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

12.07.2025 08:05:00

பிக்பொஸ் புகழ்  தர்ஷன் கதாநாயகனாக நடித்துள்ள ~சரண்டர்~ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி தொடர்பான தகவலை படக்குழு பகிர்ந்துள்ளது.

 

அறிமுக இயக்குனர் கௌதமன் கணபதி இயக்கியுள்ள இப் படத்தினை அப்பிட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

கிரைம்-ஆக்சன் திரில்லராகவும் உணர்வுப் பூர்வமாகவும் உருவாகியுள்ள இப் படம், தமிழ் சினிமாவில் முற்றிலும் புதுமையான அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் தர்ஷன் பொலிஸ்  அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் லால், சுஜித் சங்கர், முனிஷ்காந்த், மன்சூர் அலிகான், பதினே குமார் உள்ளிட்ட பல  நடிகர்கள்  முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி பலரது கவனத்தை பெற்றது. இந்தநிலையில், சரண்டர் படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஓக்ஸ்ட் மாதம் 1ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.