அண்ணாத்த பாடல் வரவேற்பை பெறுமா?

05.10.2021 15:34:22

ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளிவருகிறது. சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். நயன்தாரா, குஷ்பு, மீனா உள்பட பலர் நடித்துள்ளனர். இமான் இசை அமைத்துள்ளார். இமான் இசையில், விவேகா எழுத்தில் உருவாகி உள்ள ரஜினியின் ஓப்பனிங் சாங் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுவாக ரஜினியின் மாஸ் படங்களில் இதுபோன்ற ஒரு பாடல் வெளிவரும். அந்த பாடல் ரஜினியை புகழும் அதே நேரத்தில் மக்களுக்கு அறிவுரையும் சொல்லும். இந்த இரண்டும் கலந்து தான் இந்த பாடலும் வெளியிடப்பட்டுள்ளது.

ரஜினி அரசியலுக்கு வருவார். நல்லாட்சி தருவார் என்கிற எதிர்பார்ப்பில் மக்கள் இருந்தபோது அவரது இதுபோன்ற பாடல்கள் மக்களால் விரும்பி ரசிக்கப்பட்டது. ஆனால் தற்போது ரஜினி அரசியலில் ஈடுபடப்போதில்லை என்று அறிவித்த பிறகு அவரின் இத்தகையான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் எப்படி பார்க்கப்படும் என்று தெரியவில்லை. படம் வரும்போது தான் பாடலின் வரவேற்பு குறித்து தெரியவரும் என்கிறார்கள். அதேசமயம் யு-டியூப்பில் இந்த பாடல் 35 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது. இதோ அந்த பாடல் வரிகள்....

காந்தம் கணக்காக கண்ண பாரு கண்ண பாரு
ஆளே மிடுக்கா அண்ணன் பாரு அண்ணன் பாரு
ஊரு பூறா தாறு மாறா விசிலு பறக்க
ஆரவாரத்தோட சத்தம் தெறிக்க தெறிக்க
வீரத்துக்கு வேற பேரு காளையன்னு சொல்லு
வெற்றி வாகை சூடப்போறோம்
கூட சேர்ந்து நில்லு.

அண்ணாத்த அண்ணாத்த வர்றேன்
அதிரடி சரவெடி தெருவெங்கும் வீசு
அண்ணத்த அண்ணாத்த வர்றேன்
நடையில உடையில கொல கொல மாசே
கூண்டுல புயலுக்கு வேலையில்ல
தாண்டி வா கடமைகள் காத்திருக்கு
தூண்டில திமிங்கிலம் மதிப்பதில்ல...
துணிஞ்சு வா கடவுளே துணை நமக்கு
உறுதியுடன் மோது... மோது
உலகையே ஜெயிக்கலாம்ம்
உனக்கு இணை ஏது...ஏது
வானையும் வளைக்கலாம்

அண்ணாத்த பேசுனா ஸ்டைலு
அண்ணாத்த பாடுனா ஸ்டைலு
அண்ணாத்த ஆடுனா
கொண்டாட்டம் கொண்டாட்டம்தான்.

கீழடிக்கு பக்கத்தூறு
வாரித் தரும் வைகை ஆறு
நித்தம் நித்தம் நெல்லு சோறு
தாளடிக்கும் களத்துல
தப்பிப்போன நெல்லை அள்ளி
பசியாறும் பத்து ஊரு
வேரில் வீரம் தாங்கி ஓங்கி
வாழும் அதிசய நிலமடா
மாரில் ஈட்டி வாங்கி
போரில் மோதும் மறத்தமிழ் இனமடா

பாசக்காரா, நேசக்காரா, வேலைக்காரா, மூளைக்காரா
மாயக்காரா, மச்சக்காரா காவக்கரா வாய்யா

காலம் வாழ்வில் பொன்னானது
அதை கவனம் வைத்து முன்னேறிடு
ஆசை மிகவும் பொல்லாதது
அதன் காதை திருகி கரை சேர்ந்திடு

உலகினில் அழகு எது சொல்லவா
எதிரிக்கும் இரங்கும் குணமல்லவா
உயர்தர வீரம் எது சொல்லவா
சுயதவறுணரும் செயலல்லவா
நெற்றியில வேர்வ வேணும்
நெஞ்சில் நேர்மை வேணும்
மத்ததெல்லாம் எண்ணம் போல
தானா வந்து சேரும்

விரல் பத்து இருக்குது
விடியலை எழுப்பிடு
எதற்கும் நீ அஞ்சக்கூடாதே
கனவுகள் நடந்திடும் அதுவரை வாழ்க்கையில்
நொடியும் நீ துஞ்சக்கூடாதே
அண்ணாத்த மாசுக்கே பாஸு
அண்ணாத்த வாக்கிங்கே ரேஸு
அண்ணாத்த மோதுனா
பட்டாசு பட்டாசுதான்.