எச்ஐவி சுயபரிசோதனைச் சாதனம்

17.12.2022 10:11:00

இலங்கையில் எச்ஐவி தொற்று உறுதியான பல பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை முழுவதும் இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் மூலம் குறித்த தோற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அடையாளம் காணப்பட்டுள்ள  தொற்றாளர்கள்

இலங்கையில் எச்ஐவி தொற்று உறுதியான பல பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை முழுவதும் இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் மூலம் குறித்த தோற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்

இவ்வாண்டு எச்ஐவி தொற்று உறுதியான 568 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நவம்பர் மாதம் மட்டும் 90 எச்ஐவி தோற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நவீன பரிசோதனை கருவிகள் மூலம் மிக இலகுவான முறையில் பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடியதாக உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

எச்ஐவி சுயபரிசோதனைச் சாதனம்

இதேவேளை எச்ஐவி சுயபரிசோதனைச் சாதனங்களை இலங்கை முழுவதும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளதாக வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த சாதனங்களை தங்களது பிரதேசங்களில் உள்ள தேசிய பாலியல் நோய்ப் பிரிவுகளில் பெற்றுக்கொள்ள முடியும் என வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

எச்ஐவி சுயபரிசோதனைச் சாதனத்தை வீடுகளில் பெறும் வசதி

 

எச்ஐவி சுய பரிசோதனைச் சாதனத்தை நிகழ்நிலை (online) மூலம் ஓர்டர் (order) செய்தும் வீடுகளில் இருந்தவாறே பெற்றுக்கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இதனை, know4sure.lk என்ற இணையதளத்தில் ஓர்டர் செய்து பெறமுடியும் என கூறப்பட்டுள்ளது.