ஐ.நா அமைதிப்படையில் இருந்து இலங்கைப் படைகளை இடைநிறுத்த வேண்டும்!

04.02.2021 09:49:50

ஐ. நா மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையை தொடர்ந்து இலங்கைப் படையினரை அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை ஐ.நா இடைநிறுத்த வேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை அமைதிப்படையில் பணியாற்றுவதற்காக தெரிவு செய்யப்படும் இலங்கைப் படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனரா என ஆராயப்பட்டதா என்பதை உறுதி செய்யக்கூடிய நிலையில் நியுயோர்க் இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கைப் படையினரை அமைதிப்பணிகளில் ஈடுபடுத்துவதற்கு முன்னர் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டிய சட்டரீதியான கடமை ஐ.நா அமைதிபணிகளுக்கான திணைக்களத்திற்குள்ளது எனவும் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

ஐ.நா செயலாளர் நாயகத்தின் மனித உரிமை மற்றும் இலங்கையில் நீதி ஆகியவை குறித்த கொள்கை அடிப்படையிலான நிலைப்பாட்டின் அடிப்படையில் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு பதவி உயர்வை வழங்கினால் அதற்காக விளைவுகளை என்பதை ஐக்கிய நாடுகள் அமைதிப்படை இலங்கையில் வெளிப்படுத்த வேண்டிய தருணமிது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.