ஐ.எஸ் அச்சுறுத்தலால் மக்களுக்கு எச்சரிக்கை
ஐ.எஸ்., அமைப்பின் அச்சுறுத்தல் காரணமாக காபூல் விமான நிலையத்திற்கு பயணிக்கும் மக்களுக்கு, அமெரிக்க துாதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் ஏராளமான மக்கள் திரள்வதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், விமான நிலையத்திற்கு பயணிக்கும் அமெரிக்கர்கள் மற்றும் ஆப்கன் மக்களை குறிவைத்து, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து அங்கு பயணிக்கும் மக்களுக்கு அமெரிக்க துாதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காபூல் விமான நிலையத்திற்கு பயணிக்கும் நபர்களுக்கு தனிப்பட்ட முறையில் அமெரிக்க அரசு பிரதிநிகள் சில வழிகாட்டுதல்களை வழங்குவர். எந்த இடத்திற்கு செல்ல வேண்டும்; எந்த வழியை பயன்படுத்த வேண்டும் போன்றவற்றை அவர்கள் தெரிவிப்பர். இந்த வழிகாட்டுதல்கள் இல்லாமல் யாரும் விமான நிலையத்திற்கு பயணிக்க வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.